தமிழ்நாடு

கனமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார்: தமிழக அரசு

DIN

கனமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழைக்காலத்தில், 1.10.2021 முதல் 18.11.2021 வரை தமிழ்நாட்டில் 480.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 61 சதவிகிதம் கூடுதல் ஆகும்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில சராசரி 28.9 மில்லி மீட்டர். திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 64.71 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இது, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை (19.11.2021) சென்னைக்கு அருகில் கரையைக் கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று (18.11.2021) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
19.11.2021 திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

உபரி நீராக முக்கிய நீர்த்தேக்கங்களான, செங்குன்றத்திலிருந்து 2156 கன அடியும், சோழவரம் ஏரியிலிருந்து 700 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து 2111 கனஅடியும், பூண்டியிலிருந்து 7021 கன அடியும் திறந்து விடப்படுகிறது.
* தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையின் தலா 2 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 குழுவும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளது.
* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 54 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 793 இராட்சத பம்புகளும் தயார் நிலையில் உள்ளன.
* இதர மாவட்டங்களில், 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 JCB கள், 2115 ஜெனரேட்டர்கள், 483 இராட்சத பம்புகள் உள்ளிட்ட தேடல் மற்றும் மீட்பு
உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
* கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5106 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
* தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரால் பயிற்சி அளிக்கப்பட்ட 3023 காவலர்கள் கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர், 3685 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், 834 காவலர்கள்
சென்னை மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
* 1.06 இலட்சம் முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இதில் 19529 பெண் முதல் நிலை மீட்பாளர்கள் ஆவர். பேரிடர் காலங்களில் கால்நடைகளை பாதுகாக்க 19535 முதல் நிலை மீட்பாளர்களும், மழைக்காலங்களில் விழும் மரங்களை வெட்டி அகற்ற 15912 முதல் நிலை
மீட்பாளர்களும், நீச்சல் தெரிந்த 19547 முதல் நிலை மீட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
* பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.
* கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* கனமழை நேர்வுகளில் நீர்த்தேக்கங்கள் / அணைகளில் அதிகப்படியான நீர்வரத்து வர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு அணையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு வெள்ள அபாயத்தை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்கள்
இதுவரை, பெய்த மழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்களின் நலன் கருதி, 9 மாவட்டங்களில் மொத்தம் 36 முகாம்களில், 2156 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 839 நபர்கள் 5 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 61,34,302 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி
* 6,663 மருத்துவ முகாம்கள் மூலம் 2,43,149 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* 24985 புகார்கள் வரப்பெற்று, 23472 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* 1070-ல் இதுவரை 3995 புகார்கள் பெறப்பட்டு 3968 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.
* மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் இதுவரை 1219 புகார்கள் பெறப்பட்டு, 1211 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பெய்த கனமழை முதல் அதிகனமழையினால் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் கணக்கிடப்பட்டு, முதல் நிலை மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ. 549.63 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.2079.86 கோடியும், ஆக மொத்தம் ரூ.2629.29 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி, மத்திய அரசுக்கு 17.11.2021 அன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT