பலத்த மழையின் காரணமாக உதகையில் தேங்கிய மழை நீரில் சிக்கிக் கொண்ட வாகனங்கள்.  
தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவு வரை நீடித்த கன மழை! 

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை தொடங்கிய கன மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் சேரங்கோட்டில் அதிகளவாக 118 மி.மீட்டரும், உதகையில் 98 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

DIN


நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை தொடங்கிய கன மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் சேரங்கோட்டில் அதிகளவாக 118 மி.மீட்டரும், உதகையில் 98 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல கொடநாட்டில் 85 மி.மீட்டரும்,  அவலாஞ்சியில் 83 மி.மீட்டரும், எமரால்டில் 55 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. 

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1.118 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தேங்கிய மழை நீரில் சிக்கிக் கொண்ட வாகனங்கள். 

பலத்த மழையின் காரணமாக உதகையில் காந்தல் பகுதியில் உள்ள சுமார் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்தவர்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைத்தனர். 

அதேபோல உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் சுமார் 4 அடி உயரத்திற்கு தேங்கிய மழை நீரில் 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன. 

உதகை காந்தல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றும் தீயணைப்பு வீரர்.

அதேபோல படகு இல்லம் எதிரே உள்ள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால் இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையால் குன்னூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. 

படகு இல்லம் எதிரே சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

பலத்த மழை மற்றும் இடி மின்னலால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT