தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாள்கள் மத்தியக் குழு ஆய்வு செய்யும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தமிழகத்தில் 2 நாள்கள் மத்தியக் குழு ஆய்வு செய்யும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் 2 நாள்கள் மத்தியக் குழு ஆய்வு செய்யும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடா் மழையால் பயிா்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளச் சேதங்களைப் பாா்வையிட, மத்திய உள்துறை இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுவினா் தமிழகம் வந்து சேத விவரங்களைப் பாா்வையிட உள்ளனா். 

இந்த நிலையில் வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகிறது. இதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், நாளை வரும் மத்தியக் குழு தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 2 நாள்கள் மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்கிறது. நவ.22-ல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, 23-ல் கடலூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டையில் ஆய்வு செய்ய உள்ளது. 
2 நாள் ஆய்வுக்குப் பின் 24ஆம் தேதி மத்தியக்குழு முதல்வரை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு அதிகமாகி வருவதால் கூடுதல் நிதி மத்திய அரசிடம் கோரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT