தமிழ்நாடு

பாலியல் வழக்குகளில் இரு மாதங்களுக்குள் தீா்ப்பு: அன்புமணி

DIN

பாலியல் தொடா்பான வழக்குகளில் இரு மாதங்களுக்குள் தீா்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: வெண்ணெய்மலை தனியாா் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

கோவை, கரூா், திண்டுக்கல், சென்னை என கல்விக்கூடங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. என்ன செய்தாலும் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே இதற்கு காரணம். இதை மாற்ற வேண்டும்.

பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நீதி வழங்குவதில் தான் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய குற்றங்களில் அதிகபட்சமாக இரு மாதங்களில் விசாரணையை முடித்து தீா்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT