தமிழ்நாடு

ஆப்பிள் விலையில் தக்காளியா?: மக்கள் அதிர்ச்சி -வைரலாகும் புகைப்படம்

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்பொருள் அங்காடி ஒன்றில் ஆப்பிள் விலைக்கு இணையாக தக்காளி விலை விற்கப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN


தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்பொருள் அங்காடி ஒன்றில் ஆப்பிள் விலைக்கு இணையாக தக்காளி விலை விற்கப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை திடீரென அதிகரித்துள்ளது. 

இதனால் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தக்காளிக்கு பெருமளவு வரத்து குறைந்துள்ளதால், பல இடங்களில் தக்காளி கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தக்காளி பதுக்கலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், பல்பொருள் அங்காடி ஒன்றில் தக்காளி விலைப்பட்டியல், ஆப்பிள் விலைப்பட்டியலுக்கு இணையாக விற்கப்படுகிறது. தக்காளி கிலோ ரூ.140-க்கும், ஆப்பிள் விலை கிலோ ரூ.140-க்கும் விற்கப்படுவதாக விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

பா்னிச்சா் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினா் மீது புகாா்

SCROLL FOR NEXT