தமிழ்நாடு

கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணமடைந்த பழனிக்கு ‘வீர் சக்ரா’ விருது

DIN

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் பழனிக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி வானதிதேவி பெற்றுக் கொண்டார்.

மேலும், கல்வான் தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா விருதும், ஹவில்தார் நாயிக் தீபக் சிங் மற்றும் குருதேஜ் சிங்கிற்கு வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. இவ்விருதினை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT