மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,000 கன அடியாகச் சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 11 மணிக்கு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து 27,000 கன அடியாக குறைந்து உள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,000 கன அடியாகச் சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 11 மணிக்கு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து 27,000 கன அடியாக குறைந்து உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 11 மணிக்கு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து 27,000 கன அடியாக குறைந்து உள்ளது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 27,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 10,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் வேலை... இளநிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும்!
அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆக உள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.