கெங்கவல்லியில் சமுதாய வளைகாப்புத் திருவிழா
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கெங்கவல்லி ஒன்றியத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கெங்கவல்லி ஒன்றியத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
இதற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளரும், அட்மா குழு சேர்மனுமான ஏ.கே.அகிலன் தலைமை வகித்தார்.
கெங்கவல்லி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் உமாராணி, கூட மலை ஊராட்சி மன்றத் தலைவர் யசோதா, துரைசாமி, செந்தாரப்பட்டி நகரச் செயலாளர் எஸ்.பி.முருகேசன், செந்தாரப்பட்டி தலைமையாசிரியர் வெங்கடாஜலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Advertisement
Advertisement
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியானது கூடமலை, தெடாவூர், செந்தாரப்பட்டி தம்மம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி நகர திமுக செயலாளர்கள் தம்மம்பட்டி வி.பி.ஆர். ராஜா, தெடாவூர் வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.