கள்ளபாளையத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூர் தொகுதி எம்எல்ஏ வி.பி.கந்தசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள். 
தமிழ்நாடு

கள்ளபாளையத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: மக்கள் மறியல்

சூலூர் அருகே கள்ளபாளையத்தில் டாஸ்மார்க் மதுக்கடை கூடாது எனக்கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம் - செட்டிபாளையம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். 

DIN

சூலூர் அருகே கள்ளபாளையத்தில் டாஸ்மார்க் மதுக்கடை கூடாது எனக்கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம் - செட்டிபாளையம் நெடுஞ்சாலையில் சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.கந்தசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். 

மூன்று முறை போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளாமல் மதுக்கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் டாஸ்மாக் மேலாளர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து டாஸ்மாக் கடையை அகற்றுவதாக கூறினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்தனர்

இந்த போராட்டத்தில் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சூலூர் காவல்துறையினர் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திர பிரசாத் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், கடையை அகற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் ஒரு மணி நேரமாக இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

சுமார் இரண்டு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரம்மாண்டமாக நடைபெறும் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் போஸ்டர் வெளியீடு!

அவள் ஒரு கலை... பூஜா ரெய்னா!

ஒன்று சொல்லவா... ஷீபா!

கடல் தீரம்... மோனலிசா!

வன மேகம்... பாப்பியா சஹானா!

SCROLL FOR NEXT