கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை குறைப்பு

சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணமானது ரூ. 10ஆக குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணமானது ரூ. 10ஆக குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து ரயில்வே கட்டணத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், ரயில் நிலையங்களில் கூட்டநெரிசலை தடுப்பதற்காக நடைமேடைக் கட்டணத்தை ரூ. 10லிருந்து ரூ. 50ஆக உயர்த்தினர்.

தற்போது தமிழகத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் முன்பதிவு இல்லாத பயணம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை ரயில்வே நிர்வாகம் அளித்து வருகிறது.

இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கோட்டத்திற்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணமானது மீண்டும் ரூ. 10க்கு குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT