தமிழ்நாடு

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

DIN


கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

கோவையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, போலீஸார், போக்சோ வழக்குப் பதிவு செய்து, தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு போக்சோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
மனுவை விசாரித்த நீதிமன்றம், மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT