கோப்புப்படம் 
தமிழ்நாடு

பேராவூரணி அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

பேராவூரணி அருகே வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

DIN

பேராவூரணி: பேராவூரணி அருகே வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பூங்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வைத்தி மனைவி சிவபாக்கியம்(85) மண்சுவரால் கட்டப்பட்ட கூரைவீட்டில் தனியாக வசித்து வந்தார். 

பேராவூரணி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் புதன்கிழமை இரவு வலுவிழந்த மண்சுவர் சரிந்து விழுந்ததில் காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் என். அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். 

இது குறித்து பேராவூரணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT