தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

DIN

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி இன்னும் 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவுள்ளதால் தமிழகத்தில் இன்றுமுதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரிடர் மேலாண்மை ஆணையம் பகிர்ந்துள்ள வானிலை மையத்தின் அறிக்கையில்,

“அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை  பெய்ய வாய்ப்புள்ளது.”

இந்த அறிக்கையானது நவம்பர் 25 காலை 10 மணிக்கு பகிரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT