தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையீடு: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

DIN

கடலூர்: கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நல்லூர் வட்டார விவசாயிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி பயிர்களுடன் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

இதேபோல், குள்ளஞ்சாவடி சத்திரத்தில் வாரச் சந்தை நடைபெறும் இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதி விவசாயிகள் மொத்தமாக வந்திருந்து மனு அளித்தனர்.

மழை, வெள்ள சேதம் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும், உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார். 

மேலும், ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, விவசாயிகள் தங்களது பகுதி குறைகளை எடுத்துக் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT