கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்க முயற்சி: சகோதரர்கள் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயற்சித்த புகாரின் பேரில், நில அபகரிப்பு பிரிவு போலீசார் சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயற்சித்த புகாரின் பேரில், நில அபகரிப்பு பிரிவு போலீசார் சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீஸôர் தரப்பில் கூறியதாவது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வேயில் எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருபவர் நவராஜன். அதோடு, இங்குள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது உறவினர்களுக்கு சொந்தமான 0.87 சென்ட் நிலம் திருவள்ளூர் அருகே த்த சென்றாயன்பாளையம் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை இவர்கள் கடந்த 2001 ஆண்டு முதல் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் பணி நிமித்தமாக நவராஜன் அரக்கோணத்திலும், அவரது சகோதரர் செந்தில்குமார் கர்நாடக மாநிலத்துக்கும் சென்று விட்டனர்.

கிராமத்திற்கு நீண்ட நாள்களாக வராமல் இருந்ததால், இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியாண்டவரின் மகன்களான சுதாகரன் என்ற சுதாகர் (41), தமிழ்ச்செல்வன் (32) ஆகியோர் தங்களது தாயார் பரிமளா பேரில் 2018-இல் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்து விற்பனை செய்யவும் முயற்சி செய்துள்ளனர்.

இதையறிந்த நடராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாரிடம் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணைக்கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில், ஆய்வாளர் ரமேஷ் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர்  சுதாகரன் என்ற சுதாகர், தமிழ்ச்செல்வன் சகோதரர்களை கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT