தமிழ்நாடு

பச்சமலையில் மலைச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு!

DIN


தம்மம்பட்டி: தொடர் மழையால் பச்சமலை 6 ஆவது வளைவில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தம்மம்பட்டி, உப்பிலியாபுரத்திலிருந்து அரசு பேருந்துகள், பால் வண்டி உள்ளிட்ட இதர வாகனங்கள் மலைக்கு அதிகாலை முதல் செல்ல முடியாமல் திரும்பி விட்டன. 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம் பச்ச மலை ஊராட்சியில், பச்சமலையில் பெரிய பக்களம், சின்னபக்களம், பெரிய நாகூர், சின்ன நாகூர், வெங்கமுடி, ஓடைக் காட்டுப் புதூர், ஓடைக்காடு, மாயம்பாடி, புன வரை, நெய்வாசல், நல்ல மாத்தி, மலங்காடு, சின்ன மங்களம், பெரிய மங்களம் உள்ளிட்ட 32 மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 

பச்சமலையில் 13 வளைவுகள் உள்ளன. இதில் தொடர் மழையால் ,6 ஆவது வளைவில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் தம்மம்பட்டி, உப்பிலியாபுரத்திலிருந்து அரசு பேருந்துகள், பால் வண்டி உள்ளிட்ட இதர வாகனங்கள் மலைக்கு அதிகாலை முதல் செல்ல முடியாமல் திரும்பி விட்டன. 

துறையூர்  வனச்சரகத்தின்  கட்டுப்பாட்டில் இம்மலை உள்ளதால், அவர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT