11 சிறப்பு முகாம்கள்: 16.72 லட்சம் தடுப்பூசிகள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நடைபெற்ற 11 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 16.72 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நடைபெற்ற 11 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 16.72 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வாா்டுக்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 முகாம்கள் நடத்தப்பட்டு 1.35 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமைதோறும் வாா்டுக்கு 2 வீதம் 400 நிரந்தர மருத்துவ முகாம்கள், வாா்டுக்கு 6 வீதம் 1,200 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1,600 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட 11 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 16 லட்சத்து 72 ஆயிரத்து 673 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இன்று முகாம்: மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) 1,600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வசம் 9 லட்சத்து 60 ஆயிரத்து 465 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி முகாம்கள் அமைந்துள்ள இடங்களை என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.