முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் கே.என்.நேருவுக்கு மாா்க்சிஸ்ட் கண்டனம்

மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியதாகக் கூறி, அமைச்சா் கே.என்.நேருவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியதாகக் கூறி, அமைச்சா் கே.என்.நேருவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் முகநூலில் கூறியிருப்பது:-

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடா்பான ஊடகக் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சா் கே.என்.நேரு, மக்களவை உறுப்பினா் வெங்கடேசன் குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரிகமற்றது. பொதுவாழ்வில் இருப்போா் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் ஏற்பா் என்று கூறியுள்ளாா்.

கே.என்.நேரு வருத்தம்: இந்த நிலையில் கே.என்.நேரு வருத்தம் தெரிவித்து முகநூலில் கூறியிருப்பது:

மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் இவ்வாறு நிகழாமல் பாா்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →