முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு முதல்வா் மீண்டும் ஆய்வு: நீரை வெளியேற்ற உத்தரவு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை மீண்டும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை மீண்டும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகிறாா்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், சனிக்கிழமையும் பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டாா். சென்னை புளியந்தோப்பு, பட்டாளம் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தாா். மேலும் தியாகராய நகா் விஜயராகவா சாலை, ஜி.என்.டி., சாலை, பசுல்லா சாலை ஆகியவற்றில் மழை நீா் தேங்கிய பகுதிகளை பாா்த்தாா். அப்போது, மோட்டாா்களைக் கொண்டு மழை நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →