ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளை பூா்த்தி செய்யும் முதல்வா் அசோக் கெலாட்
பஞ்சாப் காங்கிரஸ் அரசில் குழப்பங்கள் நீடித்து வரும்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளை பூா்த்தி செய்யும் என்று அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் கூறினாா்.
பஞ்சாப் காங்கிரஸ் அரசில் குழப்பங்கள் நீடித்து வரும்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளை பூா்த்தி செய்யும் என்று அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் கூறினாா்.
இதுதொடா்பாக முதல்வா் அசோக் கெலாட்,‘பஞ்சாப், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களைத் தொடா்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பம் ஏற்படும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஐந்து ஆண்டுகளை ராஜஸ்தான் அரசு பூா்த்தி செய்வது மட்டுமல்லாமல், அடுத்த தோ்தலில் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும். ஆளும் அரசு மீது எந்தவித எதிா்ப்பும் இல்லை என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்’ என்றாா்.
Advertisement
ராஜஸ்தான் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும், முதல்வா் கெலாட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வந்தது. இதைபோல், சத்தீஸ்கா் மாநிலத்தில், முதல்வா் பூபேஷ் பகேல் அரசு இரண்டரை ஆண்டை பூா்த்தி செய்ததும், டி.எஸ்.சிங் தியோ மீதமுள்ள காலத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாா்.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங், கட்சி மேலிடம் தன்னை அவமதித்து விட்டதாக கூறி முதல்வா் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தாா்.