தமிழ்நாடு

பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN

பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பல் மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டி.எம்.எஸ். சென்னை வளாகத்தில் வெளியிட்டார். 
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான மொத்த இடங்கள் 358. 

இதில் அரசு கல்லூரிகளுக்கான இடங்கள் 62, சுயநிதி கல்லூரிகளுக்கான இடங்கள் 296 ஆகும். இப்போது பெறப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்கள் 1018. இதில் தரவரிசைக்கு தகுதியான விண்ணப்பங்கள் 964. 
இப்பட்டியலின் அடிப்படையில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு நாளை 3-10-2021 அன்று தொடங்கப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT