கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ : ஆவணங்கள், கணிப்பொறிகள் எரிந்து நாசம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், 6 கணிப்பொறிகள், மேசைகள், நாற்காலிகள் எரிந்து சாம்பலானது.
தமிழ்நாடுகும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ : ஆவணங்கள், கணிப்பொறிகள் எரிந்து நாசம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், 6 கணிப்பொறிகள், மேசைகள், நாற்காலிகள் எரிந்து சாம்பலானது.
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், 6 கணிப்பொறிகள், மேசைகள், நாற்காலிகள் எரிந்து சாம்பலானது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி வட்டத்தை சேர்ந்த 81 வருவாய் கிராமங்ளை சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளுக்கு வந்து போவார்கள்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி முடித்து வீடு திரும்பிய நிலையில், இருவர் இரவு பணியில் இருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில்
பிற அதிகாரிகள் பணி செய்யும் பிரதான பகுதியில் மின் கசிவின் காரணமாக தீ பிடித்தது. தொடர்ந்து அந்த பகுதியில் தீ மளமளவென பரவியது.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வருவதை கண்டு தூக்கத்தில் இருந்து எழுந்த அலுவலர்கள் உள்ளே சென்று பார்த்த போது தீவிபத்து ஏற்பட்டதை அறிந்து அதிர்ந்தனர்.
தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ந.மகேஷிற்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து வட்டாட்சியர் ந.மகேஷ் வட்டாட்சியர் அலுவலகம் விரைந்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ஆறு கணினிகள், 6 மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பல பொருள்கள், முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமானது.
இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து வரும் நிலையில் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு பணியில் ஆள்கள் இருந்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் மிகப் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது.