இங்கெல்லாம் அடுத்த ஓரிரு மணி நேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வேலூர், ரணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வேலூர், ரணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் இது குறித்த எச்சரிக்கைத் தகவலை தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, அக்டோபர் 4ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த எச்சரிக்கைச் செய்தி திங்கள்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.