தமிழ்நாடு

27% மருத்துவ இடஒதுக்கீடு: தடைவிதிக்கக்கூடாது என திமுக மனு தாக்கல்

DIN

மருத்துவப் படிப்புகளில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  27 சதவிகிதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனுக்கள் தாக்கலாகியுள்ள நிலையில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ள கோரி மனுவில் திமுக கோரிக்கை வைத்துள்ளது.

வழக்கு என்ன?: மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாநில அரசுகள் இடங்கள் வழங்குகின்றன. அவ்வாறு வழங்கப்படும்  இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு  தமிழகத்தில் வழங்கப்படும் 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக, அதிமுக,  பாமக, மதிமுக, திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் வழக்குத்  தொடர்ந்தன. இதே கோரிக்கையுடன் தமிழக அரசும் வழக்கு தொடர்ந்தது. 

புதுச்சேரி மாநிலத்தில் 34 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உள்பட 13 பேர்  தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT