தமிழ்நாடு

பொறியியல் படிப்பு: முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு

DIN

பி.இ., பி.டெக், பொறியியல் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 

கலந்தாய்வில் 14,788 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 10,148 பேர் பங்கேற்றதாகவும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது.

பொறியியல் படிப்பில் சோ்வதற்காக இணையதளம் வாயிலாக கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆக.24- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து பொறியியல் படிப்புக்கான சம வாய்ப்பு எண் கடந்த ஆக.25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். அதில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து பொறியியல் படிப்பு சோ்க்கைக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) கடந்த மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கியது.

கலந்தாய்வில் 14,788 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 10,148 பேர் பங்கேற்றதாகவும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 7.5% ஒதுக்கீட்டில் 5,972 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT