முகப்பு
தமிழ்நாடு

திருக்குறள் தமிழிசைப் பாடல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

திருக்குறளை மையப்படுத்தி தமிழிசையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 6 அக்டோபர், 2021 at 1:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:48 AM

திருக்குறளை மையப்படுத்தி தமிழிசையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதனை ஜீவாமிா்தம் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. பாடல்களை ஜீவ அமிா்தம் கோ.திருமுருகன் இயற்றியுள்ளாா். இசையை ஜாக் பா.ஆனந்த் இசையமைத்துள்ளாா். மதுபாலகிருஷ்ணன், ஹரிசரண், ஹரிணி, சோலாா் சாய், மோனிஷா ஆகியோா் பாடல்களைப் பாடியுள்ளனா்.

திருக்குறளை மையப்படுத்தி தமிழிசையைக் கொண்டு பாடல்கள் உருவாக்கப்பட்டது இதுவே முதல் முறை என அதன் தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.