பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்யவில்லை 
தமிழ்நாடு

பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்யவில்லை: விமானப்படை தளபதி

கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை செய்யவில்லை என விமானப்படை தளபதி வி.ஆர்.செளதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை செய்யவில்லை என விமானப்படை தளபதி வி.ஆர்.செளதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

28 வயதாகும் பெண் விமானப் படை அதிகாரி, கோவையிலுள்ள இந்திய விமானப் படை கல்லூரியில் மற்றொரு விமானப் படை அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அந்த புகாரை திரும்பப் பெற இந்திய விமானப் படை அதிகாரிகளால் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் நடந்ததா என்பதை அறிய, உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு தான் உள்படுத்தப்பட்டதாகவும், பிறகுதான், அந்த சோதனை தடை செய்யப்பட்டது என்பதை தான் அறிந்து கொண்டதாகவும் கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது விமானப்படை தளபதி பேசியது,

“இதுபோன்ற பாலியல் சம்பவத்திற்கு விமானப்படையின் சட்டத்தில் தண்டனை மிக கடுமையாக உள்ளது. மேலும், பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விதிகளை நன்று அறிவோம். மேலும், இந்த சம்பத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT