சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரக்கோணம் அருகே தலைவரது சிலை ஒன்றை அகற்றிய தாசில்தாரின் நடவடிக்கையை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசியல் கட்சிகள் தங்களது விருப்பப்படி சிலைகளை அமைக்கிறார்கள் என்று நீதிபதிகள் கருத்துக் கூறினர்.

மேலும், சமுதாயத்துக்காக தியாகம் செய்தவர்கள் எந்த நேரத்திலும் சாதி, மத அடிப்படையில் அடையாளப்படுத்தக் கூடாது. பொது மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகளை அமைப்பது தொடர்பாக விரிவான விதிகளை தமிழக அரசு வகுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசியல் கட்சிகள் மதம், சாதி மற்றும் மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைக்கின்றனர். எனவே,  தமிழகம் முழுவதும் பொது இடங்களில், நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT