'சென்ட்ரல் சதுக்கம்' கட்டடப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூ. 389.42 கோடி செலவில் 'சென்ட்ரல் சதுக்கம்' கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய சதுக்கத் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆவின்போது சிறப்பு முயற்சிகள் துரையின் முதன்மைச் செயலாளர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.