தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,359 பேருக்கு கரோனா; 20 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,359 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்தனர்.

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,359 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக ஆயிரத்து 500-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெள்ளிக் கிழமை (அக்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,359 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,75,592-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,754-ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 16 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர்.

கரோனாவிலிருந்து 1,473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,23,459-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,42,864 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு...

அதிகபட்சமாக சென்னையில் 169, கோவை 140, செங்கல்பட்டு 102,  திருப்பூர் 84, ஈரோடு 82, தஞ்சாவூர் 73, திருச்சி 67, நாமக்கல் 59, திருவள்ளூர் 58, திருவாரூர் 48  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறைந்தபட்சமாக தென்காசியில் 1, பெரம்பலூரில் 3 பேரும், தேனியில் 6 பேரும், திண்டுக்கல்லில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT