தமிழ்நாடு

நாகர்கோவில் - கோவை விரைவு ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வேண்டும்: வைகோ

DIN

நாகர்கோவில் - கோவை விரைவு ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவில்பட்டி நகரம், தென் தமிழ்நாட்டில் முதன்மையான வணிக மையங்களுள் ஒன்று ஆகும். பருத்தி, மிளகாய் மற்றும் தீப்பெட்டிகள், கோவில்பட்டியில் இருந்து நாடு முழுமையும் செல்கின்றன. கோவில்பட்டிக்கும், கோவை மாநகருக்கும் இடையே வணிகத் தொடர்புகள் நிறைய உண்டு. எனவே, நாள்தோறும் மக்கள் இரண்டு நகரங்களுக்கும் சென்று வருகின்றார்கள்.

ஆனால், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் தொடரி எண் 02667, கோவில்பட்டியில் நிற்பது இல்லை.

எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட தொடரி, கோவில்பட்டியில் நின்று செல்கின்ற வகையில் ஏற்பாடு செய்து தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்-நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, மின்அஞ்சல் கோரிக்கை விடுத்து இருக்கின்றார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT