முதல்வர் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆகியவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆகியவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் துணைத் தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், திருநாவுக்கரசர், ரவிந்திரநாத் குமார், நவாஸ்கனிக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ள்ளது.
மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ். பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், நா.எழிலன், நீலமேகம், பூமிநாதன், ஹசன் மவுலானா, செங்கோட்டையனுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
முழு விவரத்திற்கு : இங்கு கிளிக் செய்யவும்