முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 16,252 போ்

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 16,252 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 16,252 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலத்தில் இதுவரை 4.83 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26 லட்சத்து 76,936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மேலும் 1,344 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 164 பேரும், கோவையில் 137 பேரும், செங்கல்பட்டில் 101 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,457 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26.24 லட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,252-ஆக உள்ளது.

மற்றொரு புறம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 14 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,768-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →