தமிழ்நாடு

தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் இரவு காவலர் கடலில் தவறி விழுந்து பலி

DIN


தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் இரவு காவலராக பணியாற்றி வரும் மைக்கேல் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக தென்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு துறைமுகத்தில் சுமார் 250 விசைப்படகுகள் உள்ளது.  இந்த விசைப்படகுகளுக்கு இரவு நேரங்களில் காவலர்கள் உள்ளனர். 

தருவை குளத்தை சேர்ந்த நிக்கோலஸ் பாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்  இரவு காவலராக மிக்கேல் பணியாற்றி வருகிறார்.  இவர் இரவு விசைப்படகு காவலுக்கு இருந்து உள்ளார். 

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது ஒவ்வொரு படகாக மாறி கரைக்கு வரும்போது கடலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். 

இவரது உடல் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT