தமிழ்நாடு

உதகையில் பலத்த மழை: அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது

DIN

நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த மழைக்கு உதகை அரசு மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவின் 50 அடி உயரமுள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

நல்வாய்ப்பாக சுவர் இடிந்து விழும் போது அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் இவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம்  உதகை, குன்னூரில் காலை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக  அரசு மருத்துவமனையின் வெளி நோயாளிப் பிரிவு கட்டடத்தின் 50 அடி தடுப்புச் சுவர்  இடிந்து விழுந்தது.

இதேப் போன்று குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை ஜேசிபி இயந்திரம் கொண்டு நெடுஞ்சாலை மற்றும் உதகை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.  இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT