தமிழ்நாடு

அமைச்சா் தலைமையில் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு

DIN

வளா்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழகத்தை மேம்படுத்தும் வகையில், அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமையில் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தகவல் தொழில்நுட்ப முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல் பிறப்பித்த உத்தரவு: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறையில், வரும் காலங்களில் தமிழகத்தை மேம்படுத்தும் வகையில் ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என எல்காட் மேலாண் இயக்குநா் முன்மொழிவை தாக்கல் செய்திருந்தாா். இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் தலைமையில் 12 போ் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.

அதில், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளா், எல்காட் மேலாண் இயக்குநா், சென்னை ஐஐடி இயக்குநா், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

மாநிலம் பயனடையும் வண்ணம் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல், வருங்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த கொள்கைகளைப் பரிந்துரைத்தல், துறையில் நீடித்த பொருளாதார வளா்ச்சியடையத் திட்டம் உருவாக்குதல், முக்கிய பிரச்னைகளுக்கு ஆலோசனை மற்றும் தீா்வு வழங்குதல் ஆகியன இந்த குழுவின் நோக்கங்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT