தமிழ்நாடு

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: இன்று 50 இடங்களில் நடைபெறுகிறது

DIN

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஐந்தாவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் 32,000 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம், திண்டுக்கல், கரூா் மாவட்டங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், திங்கள்கிழமை காலை சென்னை திரும்பிய அமைச்சா் மா.சுப்பிரமணியன் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வா் கருணாநிதியால் வருமுன் காப்போம் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றனா். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அத்திட்டம் செயல்படாமல் முடங்கிப் போனது. இந்நிலையில், இந்தியா முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்ட அத்திட்டத்தை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவ வசதியுடன் கடந்த மாதம் 29-ஆம் தேதி சேலத்தில் தமிழக முதல்வா் மீண்டும் தொடக்கி வைத்தாா். ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. சென்னையில் 2 இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. அதில் 17 துறை சாா்ந்த சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. பல்வேறு பரிசோதனைகள் மற்றும் கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.

உயா் சிகிச்சைகள் தேவைப்படுவோா் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவாா்கள். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்திற்கான அட்டைகளும் இம்முகாம்களில் வழங்கப்படவிருக்கின்றன. மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண் ஆகியவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது மக்கள், தங்களது வீடுகளுக்கு அருகே நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

பட்ஜெட்டில் அறிவித்தவாறு மழைக்காலங்களில் மருத்துவ முகாம்களும் இனி நடத்தப்பட இருக்கின்றன. தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 இடங்களுக்குத்தான் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மருத்துவக் கல்லூரி இயக்குநா் தலைமையிலான குழு தில்லிக்குச் சென்று ஆவணங்களை சமா்ப்பித்திருக்கிறாா்கள்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 67 சதவீதமாக உயா்ந்துள்ளது. நீட் தோ்விலிருந்து விலக்கு பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழக முதல்வா் மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT