எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்ப்டடுள்ள நாகை மீனவர்களுக்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு. கோப்புப்படம். 
தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 23 பேருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்களையும் வரும் 28 ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தர

DIN


நாகப்பட்டினம்: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்களையும் வரும் 28 ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இ.சிவக்குமார்(48). இவரது சகோதரர் சிவனேசன் (42). இவர்களுக்குச் சொந்தமான இரு விசைப் படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

கடந்த 11-ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்குப் புறப்பட்ட அவர்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கடந்த புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், வியாழக்கிழமை காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு, மீனவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவர் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 23 பேரையும் வரும் 28 ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகள் மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT