சேலம்: சரஸ்வதி பூஜையை ஒட்டி சேலத்தில் உள்ள ஆலயங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எழுத பயிற்சி கொடுத்தனர்.
சரஸ்வதி பூஜை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சேலத்திலும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவினை ஒட்டி சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | மக்கள் குடியரசுத் தலைவர் கலாம்
பின்னர் குழந்தைகளுக்கு நெல்மணிகளில் அகர எழுத்துக்கள் எழுத பயிற்சி தரப்பட்டது.
இதுபோல உள்ள சேலத்தில் உள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை காலை வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
இங்கும் குழந்தைகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நெல் மணியில் அகர எழுத்துக்கள் எழுத பயிற்சி தரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.