தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அச்சம்

DIN


நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை ரூ.102.40-ஐ தாண்டியது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.40-ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.40 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிக்கப்பட்டு டீசல் ஒரு லிட்டர் ரூ.98.26 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. 

தலைநகர் தில்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.105.14-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.93.87-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோன்று மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.111.09 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.101.78 ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் ரூ.105.76 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.96.98 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.80 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.63 ஆகவும், ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.37 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.102.42 ஆகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT