தமிழ்நாடு

ஒரே வீட்டை இருவருக்கு விற்று மோசடி; வழக்குப் பதிவு

ENS


சென்னை: ஒரே வீட்டை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்த புகாரின் கீழ், குடியிருப்பு கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னை மத்திய குற்றவியல் அமைப்பின் கிளையான ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு, வீட்டை ஒரு நபருக்கு விற்பனை செய்வதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு, அதனை வேறொரு நபருக்கு விற்றதாகக் கூறிய புகாரின் கீழ், கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

இது தொடர்பான புகார் 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட நிலையில், ஒப்படைப்பு ஆவண முறைகேடு அமைப்பு சில மாதங்களுக்கு முன்புதான் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுதல், முறைகேடு செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.  லேண்ட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி. உதயகுமார் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

கோபாலபுரத்தில், மிக உயர் மதிப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் வெர்டிகா என்ற திட்டத்தை இந்தக் குழுமம் தொடங்கியது.

"கடந்த 2013ல், புகார்தாரர் உதயகுமாரை நாடியுள்ளார், வீடு வாங்க, தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக, தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கித் தருவதாக உதயகுமார் உறுதி அளித்துள்ளார். இதனடிப்படையில், வீட்டை முன்பதிவு செய்யும் வகையில் புகார்தாரர் 2 கோடியை உதயகுமாருக்குக் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். பிறகு, வங்கிக் கடன் மூலம் 4 கோடி பெறப்பட்டுள்ளது.

புகார்தாரர் 4 கோடிக்கு மாதத் தவணை செலுத்தி வரும் நிலையில், தான் முன்பதிவு செய்த வீட்டை உதயகுமார் வேறொருவருக்கு 2017ல் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அந்த வீட்டிற்கு போலி ஆவணங்கள் தயாரித்து அதை வைத்து தனியார் வங்கியில் மற்றொரு வீட்டுக் கடன் வாங்கி விற்பனை செய்துள்ளார். அதாவது ஒரே வீட்டை இரண்டு பேருக்கு விற்றுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருப்பதாக " காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் அவதால், அதிருப்தி அடைந்த புகார்தாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து, இந்த வழக்கில் 90 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவைப் பெற்றார். மேலும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு செப்டம்பரில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், வழக்குப் பதிவு சேய்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் பதிலளித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT