முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள்:பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள், ரொக்க இருப்பு குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள், ரொக்க இருப்பு குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு

அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் இருப்புத் தொகை பற்றிய விவரங்கள் நிதித்துறையால் கோரப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின்கீழ் உள்ள முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பராமரிக்கப்படும் அனைத்து வகையான வங்கிக் கணக்குகள் மற்றும் அதன் இருப்புத்தொகை விவரங்களை சேகரித்து துறை இயக்குநரகத்திடம் விரைவாக சமா்ப்பிக்க வேண்டும். மிக முக்கியமான பணிகள் என்பதால் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →