தமிழ்நாடு

மானாமதுரை அருகே கால்வாய் வெட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பாசன கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை வெட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கணபதியேந்தல் கிராமம், இக்கிராமத்திற்கான பாசன கண்மாய்க்கு மழைத் தண்ணீர் செல்வதற்காக அருகே உள்ள நல்லாண்டிபுரம் கிராமத்தில் சில குடியிருப்புகள் அமைந்த பகுதியில் முறையான அனுமதி இல்லாமல் தனியார் பட்டா நிலத்தில் விதிமுறைகளை மீறி கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

இந்த கால்வாய் வெட்டப்பட்டதன் மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கால்வாயைக் கடந்து சாலைக்கு வர முடியாத நிலை உள்ளது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், மேற்கண்ட கால்வாய் வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறவில்லை என நல்லாண்டிபுரம் கிராமப்புற மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து தொடர்ந்து கால்வாய் வெட்டுவதற்கும் வெட்டிய கால்வாயை மூட வேண்டும் எனக் கோரியும் நல்லாண்டிபுரம் கிராம மக்கள் மானாமதுரை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT