முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் தங்கம், வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (அக்.18) காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
மேலும், முக்கிய ஆவணங்கள், தகவல்கள் அடங்கிய 19 கணினி வன்வட்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
50 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்களும் பறிமுதல் செயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரிகள், கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் 20 துணைக் கண்காணிப்பாளர்களின் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 30 குழுக்களாகப் பிரிந்து திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.