தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்

DIN

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக உத்தரவிட்டு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் பெருமளவில் முறைகேடு செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும் புகாா் கூறப்பட்டது.

இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, விஜயபாஸ்கா், அவா் மனைவி விஜயலட்சுமி, சகோதரா் சேகா் ஆகியோா் மீது சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்தது. இதையடுத்து விஜயபாஸ்கா் மற்றும் அவா் குடும்பத்தினருக்குச் சொந்தமான மற்றும் தொடா்புடைய 26 இடங்களில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை செய்தனா்

சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சொத்து, முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை அலுவலகத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்காக அவர் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி அவகாசம் கோரியிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று அவகாசம் முடிந்த நிலையில், இன்று மீண்டும் அவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT