தமிழ்நாடு

‘மாநில மொழிகளில் வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும்’: எம்.பி. கனிமொழி

DIN

அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவையை மாநில மொழிகளிலும் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரபல உணவு விநியோக நிறுவனமான சொமேடோவின் வாடிக்கையாளர் சேவை ஊழியர், ஹிந்தி தெரியாது எனத் தெரிவித்த தனது வாடிக்கையாளரிடம் இந்தி தேசிய மொழி என்பதால் சிறிதாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என நேற்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கனிமொழி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

“குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

SCROLL FOR NEXT