தமிழ்நாடு

கீழடி, கொந்தகை, அகரம் அகழாய்வுத் தளங்களில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுத் தளங்களில் செவ்வாய்க்கிழமை தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டு அகழாய்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

கீழடியில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஏழாம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டது. அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த அகழ்வாய்வின்போது பண்டைய காலத் தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு தொன்மையான பொருள்கள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து 7 மாதங்களாக மேற்கண்ட இடங்களில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. அதன்பின்னர் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கீழடி அகழாய்வு தளத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை பார்வையிட்டார். சமீபத்தில் திருப்புவனம் பகுதியில் பெய்த மழையால் அகழாய்வுக்காக  தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

மேலும் கொந்தகை, அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு தளங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். அதன்பின் கீழடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்த ஏழாம் கட்ட அகழாய்வு குறித்து அங்கிருந்த தொல்லியல் ஆய்வாளர்களிடம் அமைச்சர் விவரம் கேட்டறிந்தார். கீழடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்த ஏழம் கட்ட அகழாய்வு குறித்தும் அதில் கண்டறியப்பட்ட பொருள்கள் மற்றும் அவற்றை ஆவணப்படுத்தும் பணிகள் பற்றியும் தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் அமைச்சர் தங்கம் தென்னரசிடம்  விளக்கிக் கூறினார். பின்னர் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT