நீட் தேர்வால் தற்கொலை: சேலம் மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: பழனிசாமி
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவர் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவர் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவன் தனுஷின் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.
உடன் முன்னாள் அமைச்சர் செ. செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் இருந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரது 2வது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார்.
10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.