தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  கார்த்திக், பிரியா தம்பதியினர் (கோப்பு படம்) 
தமிழ்நாடு

குடிப்பழக்கத்தால் விபரீதம்: சங்ககிரி அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்ததில் கணவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் வேதனையடைந்த மனைவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்ததில் கணவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் வேதனையடைந்த மனைவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்ததையறிந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கார்த்திக் (30). அவரது மனைவி ப்ரியா (27) இருவருக்கும் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கார்த்தி அவரது லாரியில் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். 

சம்பவம் நடைபெற்ற வீட்டின் முன்பு குழுமிய அவரது உறவினர்கள். 

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மது அருந்தி வீட்டிற்கு வந்துள்ளார். இதில் மனவேதனையடைந்த அவரது மனைவி பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த கணவர் கார்த்திக் அவரது கழுத்தை அறுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   

தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

திருமணம் நடைபெற்ற ஒன்றை ஆண்டுகளே ஆகியுள்ளதால் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT