சசிகலா 
தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா திட்டம்: அதிமுகவினர் பாதுகாப்பு கோரி காவல்துறையில் மனு

தென் மாவட்டங்களில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

DIN


தென் மாவட்டங்களில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 56 ஆவது குருபூஜை விழாவும் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் இணைச் செயலாளர் சரவணன், அதிமுக மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து வரும் 29 ஆம் தேதி காலை 10.30 - 11 மணிக்கு முத்துராமலிங்கனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர். 

இதில், வி.கே.சசிகலாவும் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் என தெரிவித்துள்ளார். எனவே, சசிகலாவுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு மற்றும் வாகன அனுமதி வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மர்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுகவினர் சசிகலாவுக்கு ஆதரவாக மனு அளித்திருக்கும் சம்பவம் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT